உள்நாட்டு செய்தி
அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்
இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 887 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.
அவர்களுள் 09 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
எஞ்சியவர்களுள் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 214 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 208 பேரும், கண்டி மாவட்டத்தில் 20 பேரும், கேகாலை மாவட்டத்தில் 50 நபர்களும், மொனராகலை மாவட்டத்தில் ஒருவரும், மாத்தளை மாவட்டத்தில் 09 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 17 நபர்களும், நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பகுதியில் 181 பேரும்,திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கோட்டை பிரதேசத்தில் 15 பேருக்கும், கொள்ளுப்பிட்டி பகுதியில் மூவருக்கும், நாரஹேன்பிட்ட பகுதியில் 07 பேருக்கும், பொரளையில் நால்வருக்கும், மருதானை பிரதேசத்தில் இருவருக்கும், புறக்கோட்டை பகுதியில் ஒருவருக்கும், கொட்டாஞ்சேனை பகுதியில் இருவருக்கும், கிரேண்ட்பாஸ் பகுதியில் ஒருவருக்கும், மட்டக்குளி பிரதேசத்தில் ஐவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.