உள்நாட்டு செய்தி
பாடசாலைகளுக்கு விடுமுறை
மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் (05) நாளையும் (06) மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே மற்றும் மாத்தறை மாவட்ட செயலாளர் வை. விக்கிரமசிறி ஆகியோர் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே மற்றும் கல்வி அதிகாரிகள் இணக்கம் தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இதேவேளை நேற்று அதிகாலை மாத்தறை தெளிஜ்ஜவில மத்தியமஹா கல்லூரியின் கட்டிடத்தின் மீதுமண்மேடு மண்சரிந்து கட்டிடம் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டதால் 9, 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.