உள்நாட்டு செய்தி
நடுவானில் வெடித்துச் சிதறிய விமானம்:
ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா இந்தியரான இவர் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் முரோவாவுக்கு செல்வதற்காக தனியார் விமானத்தில் புறப்பட்டார்.
அதன்படி தலைநகர் ஹராரேவில் இருந்து கிளம்பிய இந்த விமானம் முரோவா அருகே சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறால் திடீரென விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியது.
இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்