உள்நாட்டு செய்தி
களஞ்சியசாலைகளில் கோதுமை மாவின் அளவு தொடர்பில் கணக்காய்வு !
நாட்டில் உள்ள களஞ்சியசாலைகளில் தற்பொழுது உள்ள கோதுமை மாவின் அளவு தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி, குறித்த ஆய்வு தொடர்பான அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் பாராளுமன்றில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.