உள்நாட்டு செய்தி
தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற ஏக்கத்தில்,உயிரை மாய்த்துக்கொண்ட பெண்…!
குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக எறிய வந்துள்ளது.