உள்நாட்டு செய்தி
ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பெண்ணுக்கு விளக்கமறியல் உத்தரவு
பணத்திற்கு ஈடாக ஒன்லைன் மூலம் ஆபாச உள்ளடக்கத்தைப் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு பிள்ளையின் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஊடக அறிக்கைகளின்படி, பணம் சம்பாதிப்பதற்காக ஒன்லைனில் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நிமிடத்திற்கு 1000 ரூபா என்ற ரீதியில் தனது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பு செய்த நபர்களுடன் தனது நிர்வாண வீடியோக்களை குறித்த பெண் பகிர்ந்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.பெண்ணின் கணவர் இந்தச் செயலை ஊக்குவிப்பதாகக் காணப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.உண்மைகளை முன்வைத்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை அடுத்த விசாரணை தினத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
குறித்த பெண்ணை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.