உள்நாட்டு செய்தி
சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட அகில இலங்கை தாதியர் சங்கம்
தாதியர் தொழிலின் தற்போதைய நிலைமையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு 10 கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளரிடம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தே இன்று(26.09.2023) பிற்பகல் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.சுமார் 40,000 தாதியர்கள் தாதியர் சேவையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஆனால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.
தாதியர் நியமனம் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி மடிவத்த மற்றும் தலைவர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,“2815 தாதியர் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் வழங்குவதற்குப் பதிலாக, அவர்களில் 1000 பேருக்கு குறைந்த எண்ணிக்கையிலான தாதியர் நியமனங்களை மாத்திரமே வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பிரிவிற்கு புறம்பான பிரிவுகளில் இருந்து தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிறுத்துதல்
• தாதியர் டிப்ளமோதாரிகள் 2815 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு பதிலாக ஆயிரம் பேருக்கு மட்டும் தாதியர் நியமனங்கள் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.
• பட்டத்தை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி தாதியார்களையும் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளாமை.
• உறுதி அளிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் ஆபத்து கொடுப்பனவு வழங்காமை.
• தாதியர் முகாமைத்துவ சேவையை ஸ்தாபிக்காமமை.
• தாதியர் யாப்பு திருத்தத்தை தொடர்ச்சியாக தாமதப்படுத்துகின்றமை.
• 6/2006 சம்பள முரண்பாடுகள் மற்றும் ஏனைய சம்பள முரண்பாடுகளை சரி செய்யாமை.
• தாதிய சேவையை நாடு தழுவிய சேவையாக அறிவித்தல்.
• தாதியர் சேவைக்கு மெய்யான வரப்பிரசாதங்களுடன் கூடிய சபை அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளல் என்பன எமது பத்து அமச கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டள்ளன.மேலும், வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை” என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.