உள்நாட்டு செய்தி
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், ஜோ பையிடனின் பதவி தொடர்பில் பேச மறுப்பது ஏன்?

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பையிடனின் பதவி தொடர்பில் பேச மறுப்பது ஏன்? என இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் பேராசிரியர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“மனித உரிமைகள் ஆணையாளர் பயணத்தடை, சொத்துக்கள் முடக்கம் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். அவருக்கு அவ்வாறு செய்ய முடியாது. அவருக்கு அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் இல்லை. ஐ.நா பாதுகாப்புச் சபைக்கும், ஐ.நா பொது சபைக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உள்ளது. ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்துவதாக அவர் குற்றம் சுமத்துகின்றார். அப்படியானால் ஜோ பையிடன் ஜனாதிபதியாகியுள்ளாரே அதற்கு என்ன சொவல்வது? ஆகவே அவரை கேட்டகாமல் எம்மைப்போன்ற நாட்டின் மீது விரல் நீட்டுவது சூழ்ச்சியாகும்’ ஆகவே அவரின் அச்சுறுத்தலுக்கு நாம் பயமில்லை. எதிர்வரும் அமர்வு நாம் நிரபராதிகள் என நிரூபிக்க சிறந்த வாய்ப்பாகும்” என்றார்