உள்நாட்டு செய்தி
பிரதமர் வேட்பாளராக மீண்டும் அரசியலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் கோட்டாபய ராஜபக்ச இணைய தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு திரும்புவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த கருத்தினையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.