உள்நாட்டு செய்தி
திருகோணமலையில் பாலம் இரண்டாக உடைந்ததில், 19 பேர் காயம்….!
திருகோணமலை கடற்படை பாலம் (ஜெற்டி) இரண்டாக உடைந்ததில் துறைமுகத்தை பார்வையிடச் சென்ற 19 பேர் காயம்.ஆழம் குறைந்த கடற்பரப்பாக இருந்தமையால் எவருக்கும் உயிர்ச்சேதமில்லை.திருகோணமலையிலிருந்து துறைமுகத்தை பார்வையிடச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பாலம் (ஜெட்டி) இரண்டாக உடைந்ததனால்,அதில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களில் 15 பேர் கடற்படை வைத்தியசாலையிலும் , 4 பேர் திருகோணமலை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலிகமுவையிலிருந்து திருகோணமலை துறைமுகத்தை பார்வையிடுவத்காக சுற்றுலா வந்தவர்களுக்கே இக்கதி நடந்துள்ளது. இதில் பாடசாலை மாணவர்களே அதிகம் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து இடம்பெற்ற கடற்பரப்பு ஆழமற்றதாக இருந்தமையால் பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.