உள்நாட்டு செய்தி
நீர் மின் உற்பத்தி 15% ஆக குறைந்தது -மின்சார சபை
தற்போது 15 வீதமான மின்சாரத் தேவை நீர் மின் நிலையங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் சராசரி நீர்மட்டம் தற்போது அதன் முழு கொள்ளளவில் 23 சதவீதமாக உள்ளது என சபை குறிப்பிட்டுள்ளது.
ரன்தெனிகல அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவில் 8.1 வீதமாக குறைந்துள்ளதுடன் விக்டோரியா அணையின் நீர்மட்டம் 27 வீதமாக உள்ளது.சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவில் 1.9 வீதமாக குறைந்துள்ளது.நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதால், தற்போது நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் 80 சதவீத மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.இதேவேளை, சில நிபந்தனைகளின் கீழ் குறுகிய கால அடிப்படையில் 100 மெகாவொட் மின்சார உற்பத்தித் திறனை ஆறு மாதங்களுக்கு கொள்வனவு செய்வதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை பெற்றுள்ளது.