Connect with us

உள்நாட்டு செய்தி

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Published

on

 

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய செயற்பட தவறும் ஆசிரியர்களது சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய செயல்படுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த உத்தரவுகளை கருத்தில் கொள்ளாது தாம் முன்னர் பணியாற்றிய பாடசாலைகளிலே தொடர்ந்தும் சிலர் பணியாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

எவ்வாறெனினும் சில ஆசிரியர்கள் சேவை நிமித்தம் தற்பொழுது கற்பிக்கும் பாடசாலைகளில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு அனுமதிக்குமாறு சில அதிபர்கள் கோரியுள்ளனர்.

அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவ்வாறான பாடசாலைகளில் இருந்து பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது