உள்நாட்டு செய்தி
ஒரே நாளில் இருவேறு இடங்களில் தற்கொலை சம்பவங்கள் பதிவு
இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நேற்று (17.08.2023) காலை மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதான டிலக்ஷன் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதே நேரம் மன்னார் நறுவலிக்குளம் மாதிரிகிரமத்தை சேர்ந்த றெஜினோல்ட் வாசுகி என்ற 22 வயதான யுவதி நேற்று இரவு தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஒரே நாளில் இரு தற்கொலை மரணங்கள் மன்னார் மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதை காட்டுகின்றது.
இம் மாத ஆரம்பத்தில் யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மடு பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரின் உடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.