உள்நாட்டு செய்தி
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக Fact Crescendo Sri Lanka இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.