Connect with us

உள்நாட்டு செய்தி

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிவிப்பு..!

Published

on

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் கடும் வரட்சியானது வட பிராந்தியத்தையும் பாதித்துள்ளதுடன், இதுவரை வடக்கில் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குடிநீர் கிடைக்காத மாகாணங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீரூற்று கிணறுகளோ அல்லது வேறு நீர் உற்பத்தி செய்யும் இடங்களோ இல்லை என அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறான பிரதேசத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.