Connect with us

உள்நாட்டு செய்தி

சஜித் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்! ரணில்

Published

on

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத வேறு ஒருவரிடம் ஒப்படைத்த உலகின் முதல் சந்தர்ப்பம் இது எனவும், எனவே சஜித் பிரேமதாச இந்த விடயத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். 

சஜித் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்! ரணில் | Sajith Premadasa Ranil

மேலும் தெரிவிக்கையில், வலுவான நிதி மற்றும் மனித வள மூலதனம் இன்றி நாடு ஒன்றை துரித கதியில் பொருளாதார அபிவிருத்தி நோக்கி நகர்த்திச் செல்ல முடியாது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பில் முன்னேற்ற முடியும். தனியார் துறைக்கு திறந்த பொருளாதாரமாக அது அமைய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார். நாட்டை மீள கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருந்த காரணத்தினால் இந்த சவாலை ஏற்றுக் கொண்டேன்.

சஜித் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்! ரணில் | Sajith Premadasa Ranil

ஒரு மாத காலத்திற்குள் நாட்டில் நிலவி வந்த வரிசை கலாச்சாரத்தை நீக்க முடிந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.