உள்நாட்டு செய்தி
பொரலஸ்கமுவவில் கொலைச் சம்பவம்
பொரலஸ்கமுவ, வெரஹெர, போதிராஜபுர பிரதேசத்தில் நேற்றிரவு முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள போதிராஜபுர வீதிக்கு அருகில் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.இதன்போது, முச்சக்கரவண்டி சாரதி அந்த இடத்திற்கு வந்ததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி முச்சக்கர வண்டி சாரதி கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.காயமடைந்தவர் உறவினர்களால் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபரின் மனைவிக்கும் இடையிலான திருமண உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சந்தேக நபரைப் பிடிக்க பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்