உள்நாட்டு செய்தி
ஓடும் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 என்ற சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.அட்டன் மல்லியப்பு பகுதியில் பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த குறித்த ரயிலின் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கேயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.