உள்நாட்டு செய்தி
அதிக வெப்பம் கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு எச்சரிக்கை..!
இந்த நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான சூரிய ஒளியில் இருக்க வேண்டாம் என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு ஒவ்வாமை சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வெப்பம் வழிவகுப்பதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.