உள்நாட்டு செய்தி
வனப் பகுதிகளுக்கு தீ வைப்பு : 11 பேர் கைது
வனப் பகுதிகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் கடந்த மாதம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வனப் பகுதிகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியிருந்ததாக திணைக்களத்தின் மேலதிக வன பாதுகாப்பு நாயகம் நிஷாந்த எதிரிசிங்க குறிப்பிட்டார்.ஹந்தானை சுற்றாடல் பாதுகாப்பு வலயத்தின் கிழக்கு சரிவுப் பகுதியின் ஐந்தாம் கட்டை பகுதியில் நேற்று(08) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.நோட்டன் தென்ன வன எல்லையின் ஒஹிய வனப் பகுதியிலும் நேற்று(08) பகல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.பலாங்கொடை ரஜவக வனப்பகுதியில் நேற்று(08) காலை ஏற்பட்ட தீப்பரவலினால் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.