உள்நாட்டு செய்தி
நான்காவது மாடியிலிருந்து விழுந்து பெண் உயிரிழப்பு
பெம்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம – போகமுவ பிரதேசத்தில் உள்ள அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெரகலையைச் சேர்ந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அளுத்கம – போகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியொன்றில் உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் நேற்று (16) இரவு 11 மணியளவில் வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் மதுசானியின் கணவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அனுமதிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக பெம்முல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.