உள்நாட்டு செய்தி
மருந்துகள் தொடர்பான பிரச்சினையை ஆராய புதிய குழு
மருந்துகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் டெதுனு டயஸ் தலைவராகவும், பேராசிரியர் சந்திமா ஜீவந்தர, பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி , டொக்டர் செனித லியனகே, பேராசிரியர் நிதுஷி சமரநாயக்க, பேராசிரியர் எஸ். எஸ். பி வர்ணகுலசூரிய மற்றும் கலாநிதி பிலிப் எச்.லீ ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.கடந்த சில நாட்களாக, அரசு மருத்துவமனைகளில், சந்தேகத்திற்கிடமான மரணங்கள் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை இந்தக் குழு அறையவுள்ளது.