உள்நாட்டு செய்தி
எசல பெரஹெரவின் மின்சார கட்டணம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்
எசல பெரஹெர ஒளியூட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட தொகை தொடர்பில் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று (18) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
தலதா மாளிகை வளாகத்தில் இந்த கலந்துரையாடல் தலதா மாளிகை, சத்தரா மகா தேவாலயம் மற்றும் நகர சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் எசல பெரஹெர விளக்கு ஏற்றுவதற்கான மதிப்பிடப்பட்ட தொகை 90 இலட்சம் ரூபாவாகும்.இம்முறை அது ஒரு கோடியே முப்பத்து நானூற்று தொண்ணூற்று ஒன்பதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், சில கட்டணச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹெர விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.