உள்நாட்டு செய்தி
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை..!!
நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வருடத்தின் இரண்டாம் காலாண்டில் காணக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலை இல்லை என்பதுடன் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியன விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்வரும் காலங்களில் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து காணப்படுவதுடன் பங்குச் சந்தை விலைசுட்டெண் நேர் பெறுமதியில் காணப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.