உள்நாட்டு செய்தி
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் 150,000 கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிமித்தம் க கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2022 ஆம் ஆண்டில் கட்டார், குவைட், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தொழில்நிமித்தம் பெரும்பாலான இலங்கையர்கள் சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
மேலும் ருமேனியா ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் தொழில்நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது
இதேவேளை, இந்த ஆண்டு சுமார் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.