உள்நாட்டு செய்தி
நெற்கதிர்கள் நிறம் மாறியமை தொடர்பில் ஆராய விசேட குழு !
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற்கதிர்கள் கறுப்பு நிறமாக மாறியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று இன்று(04) வயல் நிலங்களை கண்காணிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.அதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.வயல் நிலங்களை கண்காணித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நெற்கதிர்கள் கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக விளைச்சல் குறைவடையும் அபாயம் நிலவுவதாக விவசாயிகள் கவலை வௌியிட்டுள்ளனர்.