உள்நாட்டு செய்தி
இஸ்ரேல் – இலங்கை இடையே நேரடி விமான சேவை
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் – இலங்கை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடி பயணிகள் விமான சேவையை முன்னெடுப்பது தொடர்பில் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இரு நாட்டு சிவில் விமான சேவை நிறுவனங்களுக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளின் சிவில் விமான போக்குவரத்து துறைகளுக்கு இடையிலும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இஸ்ரேலின் “Akia” விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.