உள்நாட்டு செய்தி
15 மில்லியன் ரூபா மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடியவர்கள் கைது
பொரலஸ்கமுவவில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சந்தேகநபர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.திருடப்பட்ட பொருட்களில் அமெரிக்க டொலர்கள் உட்பட பல வகையான தங்க நகைகள் மற்றும் பணம் இருந்துள்ளது.சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து கைக்குண்டு மற்றும் 24 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.