Connect with us

உள்நாட்டு செய்தி

திருமலையில் துப்பாக்கிச்சூடு

Published

on

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில்  2 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர்கள் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜெயநகர் பகுதியை சேர்ந்த  18 வயது மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு  காயமடைந்துள்ளனர்.சம்பவம் தொர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.