உள்நாட்டு செய்தி
190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு
மத்திய மருந்துக் களஞ்சியத்தில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்..ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும், நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள், இறக்குமதியில் தங்கியிருப்பதைக் குறைத்து, உள்நாட்டிலேயே 20 வகையான மருந்துகளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.