உள்நாட்டு செய்தி
அரிசியின் விலைகள் இன்று முதல் குறைப்பு !
லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 7 ரூபாவாலும், ஒரு கிலோ சிவப்பு அரிசி 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.அவற்றின் புதிய விலை முறையே 168 ரூபாவாகவும் 135 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது