உள்நாட்டு செய்தி
மின்த்தூக்கி சரிந்து விழுந்ததில் முன்னாள் சுகாதார அமைச்சர் பலி
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி.பி .சிரில், சிறிபோபுர பகுதியில் உள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது மின்தூக்கி சரிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.முன்னாள் சுகாதார அமைச்சருடன் பயணித்த அவரது சாரதியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் மூலம் மூன்றாவது மாடியில் பழுதுபார்க்கும் பணியை பார்வையிடச் சென்றிருந்த போது திடீரென மின்தூக்கி சரிந்து விழுந்ததில் அவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.