உள்நாட்டு செய்தி
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் குறைப்பு..!
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் 2 வீதத்தினால் குறைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் அட்டைகளுக்கு தற்போது அறவிடப்படும் 36 வீதமான வருடாந்த வட்டி வீதம் 34 வீதமாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் வட்டி வீதங்களை குறைத்துள்ள நிலையில் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் அதிகமாக உள்ளதென அண்மையில் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.இந்நிலையில் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.