உள்நாட்டு செய்தி
விமல் வீரவங்ச நீதிமன்றில் ஆஜர்
இன்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜரானார்.கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கிற்கு நேற்று முன்தினம் அவர் முன்னிலையாகவில்லை.இதனால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விமல் வீரவங்சவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.