Connect with us

உள்நாட்டு செய்தி

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கோதுமை மா!

Published

on

கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் படி, கோதுமை மா கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அத்தியாவசியப் பொருளாக வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பத்திரம் பெறுவதை கட்டாயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாகப் பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெட்ரோலிய வாயுவை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.