உள்நாட்டு செய்தி
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் இந்த9 வருடம் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
பருவ மழை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
W
கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்குகட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 50 வீதமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.