உள்நாட்டு செய்தி
மின்சார பஸ் சேவைக்கு அனுமதி..!
கொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்காலத்தில் மின்சார பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்குவது சிறந்த தீர்வு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முச்சக்கர வண்டிகள், வேன்கள் மற்றும் பிற ரயில்களையும் எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயக்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் போக்குவரத்து சபையை வியாபாரமாக கருதி தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.