உள்நாட்டு செய்தி
வெள்ள அபாய எச்சரிக்கை இல்லை – நீர்ப்பாசனத்துறை
மேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்து வருவதால், களுகங்கை, களனி கங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டங்களில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் எதுவும் இல்லை என நீர்ப்பாசன (நீரியல்) பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.ஆனால் இந்த ஆறுகளின் கீழ்பகுதிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இருப்பினும் இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் அதிக மழை பெய்தால், நீர்பிடிப்பு பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்தால், வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய சாத்தியமுள்ள ஆறுகளை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். பிரதான ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ள நீரோடைகளைப் பயன்படுத்தும்போது கீழ்ப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.