உள்நாட்டு செய்தி
பால்மா விநியோகத்தில் மேல் மாகாணத்திற்கு முதலிடம்
விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள பால் மா முதலில் மேல் மாகாண மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திற்கான பால்மா விநியோகத்தினை தொடர்ந்து ஏனனய மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.அத்துடன், பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் பொதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் விலைக்குறைப்பு செய்யப்பட்ட பால்மா பொதிகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சிறிது காலம் தேவைப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டமைக்கு அமைவாக தேசிய உற்பத்தியிலான பால்மா குறைக்கப்படுமா என எமது செய்திப்பிரிவு உரிய தரப்பினரிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த தேசிய பால்மா உற்த்தி நிறுவனம், இறக்குமதி செய்யப்படும் பால்மாவுடன் ஒப்பிடுகையில் தங்களது உற்பத்தி குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தது.
இறக்குமதி செய்யப்படும் பால்மா 400 கிராம் பொதியானது 1160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், தேசிய உற்பத்தியிலான பால்மா 950 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.