Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற வானிலை – 3 விமானங்கள் மத்தளவுக்கு!

Published

on

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து 297 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு 10.25 க்கு வரவிருந்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பேருந்து மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக நேற்று இரவு 10.55 க்கு மாலைத்தீவின் மாலேயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த விமானமும் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை சௌதி, தம்மாமில் இருந்து வந்த விமானமும் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.