உள்நாட்டு செய்தி
கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி !
திருகோணமலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி ஒருவர் தனது கழுத்தை அறுத்து காயமேற்படுத்திக் கொண்டுள்ளார்.பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் இன்று முற்பகல் சீனக்குடா பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போது, நீதிமன்ற கட்டிட தொகுதிக்குள் வைத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.