உலகம்
டில்லியில் வன்முறை சூழல்…
டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்முறைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ளன.
பல இடங்களில் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் தடியடி மூலம் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் இதுவரை 3 விவசாயிகள் காயமடைந்துள்ளதுடன் முழுமையாக காயமடைந்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் புது டெல்லியில் மேலும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சச்சூழல் எழுந்துள்ளது.
தற்போது, பொலிஸார் அனுமதி வழங்கிய பகுதியில் செல்லாமல், தடையை மீறிய விவசாயிகள், டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கு இருந்தவாறே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தினமான இன்று (26) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர்.
குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டெடில்லி பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.