உள்நாட்டு செய்தி
அவுஸ்திரேலியாவில் தொழினுட்ப கோளாறுக்குள்ளான விமானம் மீண்டும் நாட்டிற்கு
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாருக்குள்ளான இலங்கை விமானம் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-605 எனும் குறித்த விமான இன்று காலை 7.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்
சிறுவர்கள் ஐவர் உட்பட 218 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் குறித்த விமானமூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட v -330 எயார்பஸ் விமானம் கடந்த 15 ஆம் திகதி இரவு 10.25 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது
இதனையடுத்து குறித்த விமானத்தை பழுதுபார்ப்பதற்காக , ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 6 பொறியியலாளர்கள் குழுவினர் அவுஸ்திரேலியா சென்றிருந்தனர்.
இந்த நிலையில் பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று குறித்த விமானம் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.