உள்நாட்டு செய்தி
இன்னும் நான்கு நாளில் கொவிட் தடுப்பூசி – ஜனாதிபதி

முதலாவது கொவிட் தடுப்பூசி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமத்துடான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஏழாவது கட்டம் இன்று வலலாவிட்ட மண்டாகல கிராமத்தில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா செனக்கா என்ற தடுப்பூசியே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலாவதாக 500,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.