உள்நாட்டு செய்தி
காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யவில்லையெனில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவது சாத்தியமற்றது…
காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யவில்லையெனில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவது சாத்தியமற்றது என என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் LEO Youth Vision 2048 மற்றும் கொழும்பு LEO கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 10,000 மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகள் பலவற்றுக்கும் மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
LEO Youth Vision 2048 கழக்கத்தின் தலைவர் செனுல தீலன உள்ளிட்ட LEO கழக உறுப்பினர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதன் மூலம் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியும் என்ற வகையில் சகலரும் அது தொடர்பிலான புரிதல் மற்றும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.