உள்நாட்டு செய்தி
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை – முறைகேடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், களஞ்சியங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நடமாடும் வர்த்தகர்களையும், மலிவு விற்பனை சந்தைகளையும், சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதேவேளை, பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றமை, விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறியப்படுத்த முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.