உள்நாட்டு செய்தி
USAID உதவியின் கீழ் 48,000க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகை
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பு (USAID) ஆறு மாவட்டங்களிலுள்ள 48,000 விவசாய குடும்பங்களுக்கு இந்த சிறு போகத்தில் நிவாரண உதவித்தொகையை வழங்கியுள்ளது.நாட்டில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நெல் பயிரிடும் 48,000 குறைந்த வருமானம் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா வீதம் இரண்டு தவணைகளில் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாவை வழங்க USAID இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயக் குடும்பங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. விவசாயக் குடும்பங்களை உள்ளடக்கிய இவ் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இந்தக் கொடுப்பனவு உதவியாக இருக்கும். கடந்த பெரும் போகத்தில் தலா ஒரு மூடை யூரியா உரம் இலவசமாக வழங்கப்பட்டது.எவ்வாறாயினும், கடந்த பெரும் போகத்தில், அரசாங்கம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் விவசாயிகளுக்கு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.109,000 மானியம் வழங்கப்பட்டது.
Continue Reading