உள்நாட்டு செய்தி
கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகலாம்!
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதன்படி கொழும்பிலுள்ள அமெரிக்க பிரஜைகள், இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பௌத்த பிக்குகள் முன்னணியினர் முற்பகல் 9.30 மணிக்கு விஹாரமாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்று திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பைச் சுற்றிப் பயணிப்பது கடினமாகலாம் எனவும் வீதிகள் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மோதலாக மாறி வன்முறையாக மாறும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது. இதனால் அமெரி்க்க பிரஜைகள் ஆர்ப்பட்டம் நடக்கும் வீதிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது