Connect with us

உள்நாட்டு செய்தி

கண்டியில் 75ஆவது சுதந்திர தின விழா

Published

on

75 ஆவது சுதந்திர தின விழா சிறப்பு மத சடங்குகள் ஜனாதிபதி தலைமையில் கண்டியில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (02) மாலை கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இதேவேளை, 75ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விக்டோரியா அணைக்கட்டுக்கு முன்பாக நடைபெற்ற சிறப்பு பிரித் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.அமரபுர மகா நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்தசிறி தேரர் தலைமையில் இந்தச் சிறப்பு பிரித் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே மற்றும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.மேலும், விக்டோரியா அணைக்கட்டு வளாகத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.