Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட‌ காணிகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பு

Published

on

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 13 ஏக்கர் அரச காணி உட்பட 108 ஏக்கர் காணி சுதந்திர தினத்திற்கு முன்பாக இன்று (02) பிற்பகல் இராணுவத்தினரால் யாழ். மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த காணி நாளைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது. அதில் 130 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கோண்டுள்ளன.

காங்கேசன்துறை – மத்தி ஜே 234/ மயிலிட்டி – வடக்கு ஜே 246/ தென்மயிலை ஜே 240/ பலாலி – வடக்கு ஜே 254/ நகுலேஷ்வரம் ஜே 226 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ். வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை உடன் வழங்குமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.